ஸ்பைடர் மேன் - 3, ஸ்பைடர் மேன் 1,2 வெற்றிகளை தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையேயும் பெருமளவு விளம்பரங்களுடனும் வெளியாகியுள்ளது.

கதை என்னவாயிருக்கும்னு ட்ரெயிலர் பார்த்த அத்தனை பேருக்கும் புரிஞ்சிருக்கும். அதீத சக்தி படைத்த நாயகன் இருக்கும் போது அதற்கு சமமான அல்லது அதைவிட சக்தி படைத்த வில்லன்(கள்) இருப்பார்கள். அவர்களுடன் போரிட்டு தர்மத்தை(?) நிலைநாட்டுவார் நாயகன்.

இதுதான் ஸ்பைடர் மேன் - 3 கதையும் (1,2ம் பாகத்தின் கதையும் இதுதானேனு யாரும் கேக்காதீங்க). பொதுவாக தொடர்ச்சியாக வரும் படங்களில் பெரும்பாலுமானவற்றில் முதல் பகுதியே மக்களை கவரும் (டெர்மினேட்டர், லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் போன்றவை விதிவிலக்கு). அதை ஸ்பைடர் மேனும் உறுதி செய்யும் என்றே நம்புகிறேன்.

Spider Man

படம் ஸ்பைடர் மேன் ரசிகர்களை கவருமா என்பது சந்தேகமே ஆனா ஆக்ஷன் பிரியர்களை நிச்சயமாக கவரும். அதனால் நீங்கள் தாராளமாக செல்லலாம். ஆனா எந்தவித எதிர்பார்ப்பும் வேண்டாம் :-)

படம் கொஞ்சம் பெருசா இருந்துச்சு, முடிஞ்சி வரும் போது கொஞ்சம் லேசா தலைவலி வந்துச்சு. அதுக்கு படம் தான் காரணமானு தெரியல ;)

சரி இனிமே கதை சொல்ல போறேன். கதை தெரிஞ்சிக்கனும்னு நினைப்பவர்கள் மட்டும் படிக்கவும்…

ஸ்பைடர் மேனால் ஓரளவு குற்றங்கள் குறைக்கப்பட்டு நியு யார்க் நகரம் ஓரளவு அமைதியாக இருக்கிறது. பீட்டர் பார்க்கர் தன்னுடைய காதலியுடன் நேரம் செலவழித்து, அவருடைய இயல்பான வாழ்க்கையையும் நடத்தி கொண்டிருக்கிறார். சில நேரங்களில் ஸ்பைடர் மேனுக்கும் வேலை வருகிறது. ஆனால் அது சவாலனவைகளாக இருப்பதில்லை. மக்கள் அவரை பெரிதும் மதிக்கிறார்கள்.

அந்த நேரத்தில் அவருடைய நண்பன் ஹேரி (Harry Osben) அவர் தந்தையும் மரணத்திற்காக ஸ்பைடர் மேனை பழி தீர்க்க முயல்கிறார். அங்கே நடக்கும் சண்டையில் அவர் தன்னுடைய நினைவை இழக்கிறார்.

ஃப்ளிண்ட் மார்கோ என்னும் ஜோப்படி திருடன் தவறுதலாக ஒரு ஆராய்ச்சி நடக்கும் இடத்தில் மாட்டி மணல் மனிதனாக மாறுகிறார். இவர்தான் பீட்டரின் மாமாவை கொன்றவர் என்பது பீட்டருக்கு தெரிய வர இவரை பழி வாங்குகிறார் ஸ்பைடர் மேன். ஆனா மணல் மனிதன் திரும்பவும் தப்பித்து வருகிறார்.

இந்த நிலையில் விண்வெளியிலிருந்து வரும் ஒரு பொருள் (web மாதிரி இருந்துச்சி) ஸ்பைடர் மேன் மேல் ஏறிக்கொள்ள ஸ்பைடர் மேனுக்கு அதிக சக்திகள் கிடைக்கிறது. அவருடைய உடையும் கருப்பு நிறத்திற்கு மாறுகிறது. அவர் மனமும் பழி வாங்கும் குணமும், தானென்ற அகங்காரமும் வருகிறது.

இந்த நிலையில் தான் மணல் மனிதனை அழிக்கிறார். அவர் நண்பனுக்கு நினைவு வர அவர் பீட்டர் பார்க்கரை அவர் காதலியிடமிருந்து பிரிக்க முயல அதை அறிந்து அவரையும் அழிக்கிறார். அவருடைய போக்கில் பெரும் மாறுதல் தெரிகிறது. அவர் காதலியையும் கஷ்டப்படுத்துகிறார். பிறகு அவர் அத்தை அவருடைய போக்கில் தெரியும் வித்தியாசத்தில் அவரை எச்சரிக்க, அவர் அந்த கருப்பு நிறவாசியை அவரிடமிருந்து ஒரு வழியாக விளக்குகிறார். அந்த திமிர் பிடித்த ஸ்பைடர் மேன் சூப்பர் :-)

அந்த நேரத்தில் பீட்டர் பார்க்கரால் அவமானப்பட்டு, வேலையிழந்த எட்டிக்கு அந்த சக்தி கிடைக்கிறது.

இறுதியாக மணல் மனிதன், கருப்பு ஸ்பைடர் மேன் சேர்ந்து பீட்டர் பார்க்கரை அழிக்க நினைக்கிறார்கள். வழக்கம் போல அவருடைய காதலியை கடத்தி கொண்டு போய் தொங்கவிடுகிறார்கள். ஸ்பைடர் மேன் அவர்களுடன் போராட அவர் நண்பர் ஹேரியை நாடுகிறார். (அவர் எப்படி சாகாமல் தப்பித்தார் என்றெல்லாம் யாரும் கேட்க கூடாது.) அவர் உதவ மறுக்கிறார். ஆனால் சரியான நேரத்தில் வந்து நண்பனுக்கு உதவி செய்து உயிரை இழக்கிறார்.

கருப்பு ஸ்பைடர் மேன் இறக்க, மணல் மனிதன் திருந்த, அவரை மன்னித்து அனுப்புகிறார் பீட்டர். ஒரு வழியா படம் முடிஞ்சிது…

அடுத்த பகுதி வந்தா, இன்னும் கொஞ்சம் லேட்டா வரட்டும் :-)