Tuesday, October 9, 2007

கற்றது தமிழ் - தமிழ் எம்.ஏ.

இரண்டாயிரம் வருடம் பழமையான தமிழ் மொழி படித்த எனக்கு இரண்டாயிரம் சம்பளம்.. இருபத்து அஞ்சு வருடத்துக்கு முன்னாடி வந்த கம்ப்யூட்டர் படித்த உனக்கு இரண்டு லட்சம் சம்பளமா?

கற்றது தமிழ் இயக்குனர் ராமின் கேள்வி இது? கேள்வியில் ஒளிந்திருப்பது ஆற்றாமையா..இயலாமையா...பொறாமையா என்பதை ரசிகர்களின் பார்வைக்கெ விட்டு விடுகிறேன்..

ஜீவா..தமிழ் திரையுலகின் புதிய தலைமுறை நடிகர்களில் கொஞ்சம் பரீச்சதார்த்தமான முயற்சிகளை மேற்கொள்ளும் நடிகர்..அவரது நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் கற்றது தமிழ்..

பிரபாகர் என்ற தமிழ் படித்த முதுகலைப் பட்டதாரியின் துயரம் நிறைந்த வாழ்க்கையை திரையில் இயக்குனர் யதார்த்தமாய் சொல்ல முயன்றுள்ளார்.

அகால மரணங்களின் ஒரு மொத்தத் தொகுப்பாய் பிரபாகரின் சிறுவயது கழிகிறது...அதனால் மனம் பாதிக்கப்படும் பிரபாகரின் பாலைவன வாழ்க்கையில் பூக்கும் ஒரே வசந்தம் அவன் சிறு வயது தோழி ஆனந்தி.. ஆனந்தியின் வாழ்க்கையிலும் ஆனந்தமில்லை.. அவ்வப்போது வந்துப் போகும் சந்தோசச் சாரல் பிரபாகர் மட்டுமே..

பிரபாகர் தமிழ் படிக்கிறான்... தமிழின் மீதான பாசமா..பற்றா... அழுத்தமானக் காரணம் இல்லை.. அவனை ஆளாக்கும் தமிழய்யாவின் மீது கொண்ட பற்று எனக் கொள்ளலாம்..

தமிழ் படித்தும் பிரபாகரின் துயரங்கள் தீராது நீள்கிறது..இதனால் பிரபாகரின் மனபிறழ்வு அதிகரிக்கிறது..

அவ்வபோது பிரபாகரின் வாழ்க்கையில் வந்துப் போகும் ஆனந்தியைத் தன் வசப்படுத்த பிரபாகர் தனக்குள்ளே போராடுகிறான்.. எல்லாப் போராட்டங்களும் தோல்வி என்னும் ஒரே புள்ளியில் கொண்டு போய் குவிக்க...ஒரு கட்டத்தில் போலீஸிடம் சிக்கி தெருவில் அடிபடுகிறான்.. சிறைக்குச் செல்கிறான்...தற்கொலைக்கு முயல்கிறான்.. தன் குழப்பங்களுக்கும் பிரச்சனைகளுக்கும் விடைத் தேடி தனக்குள் குமுறுகிறான்..சந்தர்ப்ப வசத்தால் கொலை செய்யும் பிரபாகர்.. தொடர்ந்து கொலைகள் செய்வதில் ஆனந்தம் கொள்கிறான்....

ஜீவா.. புதிய தலைமுறை தமிழ் நடிகர்களில் பரிச்சார்த்தமான முயற்சிகளில் உற்சாகமாய் ஈடுபடும் ஒரு நடிகர்.. படத்தில் மெனக்கெட்டிருக்கிறார். அதன் பலன் நன்றாகவே திரையில் தெரிகிறது..அவரது முந்தைய படங்களில் ஒன்றான ராமில் அவர் ஏற்று நடித்த பாத்திரத்தின் சாயல் கொண்ட பாத்திரமே இந்தப் படத்திலும்.. ஆனால் நன்றாகவே மாறுபடுத்திக் காட்டுகிறார்..

இப்படி மனக்குழப்பங்களின் உச்சத்தில் வாழ்க்கையை நகர்த்தும் இளைஞன் பிரபாகரின் மொத்தக் கோபமும் ஐடி பிபிஓ மக்கள் மீது திரும்புகிறது.. இப்போது பதிவின் முதல் வரியைத் திரும்பப் படிங்க...

ஆனந்தியாக புதுமுகம் அஞ்சலி.. குழந்தைத் தனமான அழகு...அவ்வபோது வந்து போகிறார்..நல்லதொரு தேர்வு.. அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு ஜீவாவிடம் அவர் நிஜமாலும் தான் சொல்லுறீயா.. எனக் கேடபது... ம்ம்ம்ம் என ஜீவா தலையாட்டுவது ரசனைக்குரிய காட்சிகள்.

தமிழ் வாத்தியாராக வரும் அழகம்பெருமாள் நெல்லைச் சீமைத் தமிழை வெளுத்து வாங்குகிறார். நல்ல தேர்வு.

காமெடிக்கு கருணாஸ்...ஜீவாவின் சொந்தக் கதையைக் கேட்டு வீடியோவில் பதிய ஜீவாவால் கடத்திவரப் பட்ட வீடியோகிராபராய் வருகிறார்..கருணாஸின் டைமிங் கமெண்ட்கள் புன்னகைக்க வைக்கின்றன.. அதிலும் ஜீவா அவரிடம் எதாவது புரியுதான்னு அடிக்கடி கேட்க அதற்கு கருணாஸ் கொடுக்கும் பதில்கள் கிட்டத்தட்ட தியேட்டரில் இருக்கும் ஆடியன்சின் ரெஸ்பான்சை ஒத்துப் போகிறது..

யுவனின் பாடல்களில் குறிப்பாக இளையராஜா பாடும் பாடல் ரசிக்க வைக்கிறது.. பின்னணி இசை ஓ.கே..

கேமரா பாராட்ட வேண்டிய விசயம்.. படம் பல இடங்களுக்கு பயணிக்க கண்களுக்கு இதமாக அந்த பயணம் அமையும் படி கேமராப் பார்த்துக் கொண்டிருக்கிறது... அசத்தல்.

இயக்குனர் ராம் அவர்களுக்கு... கற்றது தமிழ் மூலம் நீங்கள் சொல்ல வந்தது என்ன? பிரபாகரின் சொந்தச் சோகங்களையா? பிரபாகர் - ஆனந்தியின் காதலையா? இல்லை ஐடி...பிபிஓ மக்கள் மீது உங்களுக்கு எழுந்துள்ள அடிப்படையற்ற கோபத்தையா? புரியவில்லை...

ஐடி, பிபிஓ மக்களைக் குறிவைத்து வைக்கப்பட்டிருக்கும் நையாண்டி காட்சிகளுக்கு மற்ற துறை மக்களின் கைத்தட்டல்கள் ஒரு வேளை கிடைக்கலாம்...

மொத்தத்தில் கற்றது தமிழ் - சிலபஸில் குழப்பம்

படம் முடிஞ்சு வெளியே வரும் போது காதில் விழுந்தது... ராப்பகலா ஒரு வாரம் பொட்டியத் தட்டிகிட்டு உக்காந்து இருந்துட்டு வீக் என்ட்ல்ல ரிலாக்ஸா படம் போலாம்ன்னு வந்தா... மாப்பி இவன் போதைக்கு நம்மளை ஊறுகாய் ஆக்கிட்டான்டா...

14 comments:

Jayaprakash Sampath said...

//கேள்வியில் ஒளிந்திருப்பது ஆற்றாமையா..இயலாமையா...பொறாமையா என்பதை ரசிகர்களின் பார்வைக்கெ விட்டு விடுகிறேன்..//

:-)

மங்களூர் சிவா said...

//
ராப்பகலா ஒரு வாரம் பொட்டியத் தட்டிகிட்டு உக்காந்து இருந்துட்டு வீக் என்ட்ல்ல ரிலாக்ஸா படம் போலாம்ன்னு வந்தா... மாப்பி இவன் போதைக்கு நம்மளை ஊறுகாய் ஆக்கிட்டான்டா...
//
:-))

இராம்/Raam said...

நல்ல விமர்சனம் தேவ்... :)


//படம் முடிஞ்சு வெளியே வரும் போது காதில் விழுந்தது... ராப்பகலா ஒரு வாரம் பொட்டியத் தட்டிகிட்டு உக்காந்து இருந்துட்டு வீக் என்ட்ல்ல ரிலாக்ஸா படம் போலாம்ன்னு வந்தா... மாப்பி இவன் போதைக்கு நம்மளை ஊறுகாய் ஆக்கிட்டான்டா...//

ஹி ஹி :))

ப்ரியன் said...

//கேள்வியில் ஒளிந்திருப்பது ஆற்றாமையா..இயலாமையா...பொறாமையா என்பதை ரசிகர்களின் பார்வைக்கெ விட்டு விடுகிறேன்..//

இயக்குநர் இன்றைய ஐடி அல்லாத மக்களின் மனவோட்டத்தை சொல்ல வந்ததாகவே படுகிறது.

நண்பன் ஒருவனுக்கு நேர்ந்த அனுபவம்,

பைக்கில் சென்ற நண்பனை நிறுத்திய போலீஸ்காரர் டோக்கை பார்த்துவிட்டு

என்னடா சம்பளம் வாங்குறே? 25 - 30 ஆயிரம் வாங்குவியா?15 வருசமா வேலையிலே இருக்கேன் இப்போதான் 15 ஆயிரம் வாங்குறேன்.அப்படி என்னதான் புடுங்கி கிழிக்கிறீங்க?

ஐடி மக்களுக்கும் , மற்றவர்களுக்குமான சம்பள வித்தியாசம் அதிகமாதல் ஆபத்து.

MyFriend said...

அருமையான விமர்சனம். :-)

PPattian said...

நல்ல விமர்சனம். இன்னும் படம் பாக்கல, ஆனால், TV யில் வரும் சில காட்சிகளை வைத்து இப்படித்தான் இருக்கும்னு தெரியுது.

//ப்ரியன் said...
ஐடி மக்களுக்கும் , மற்றவர்களுக்குமான சம்பள வித்தியாசம் அதிகமாதல் ஆபத்து.//

உண்மைதான்..

கைப்புள்ள said...

சூப்பர் விமர்சனம் மச்சி.

முதல் வரியும் கடைசி வரியும் டாப்பு.
:)

த.அகிலன் said...

நீங்க ஐடியிலா இருக்கிறிங்க தேவ்?

பிரியன் பின்னூட்டத்தை வழிமொழிகிறேன்

நாகை சிவா said...

நல்ல விமர்சனம் தலைவா..

ராமின் நடிப்புகாக பாக்கலாம் என்று இருக்கேன்....

imegery said...

oru padathai paarthuvetu kathai solvatharkuu per vimrsan alla. kathai sonnathai padithu 'super' solum aatkal irukum varai unga polapu odum! o neenga ellam 30,40 aayiram salary vangaravanloo! athan manasatchi kuthuthu...

நந்தா said...

வாவ் சூப்பர் விமர்சனம் தேவ். முதல் வரியும் கடைசி பாராவும் சூப்பர்.

இந்த படத்தை மொத்தமாக படமாக என்றில்லாமல் ஒசு சில நல்ல காட்சிகளுக்காகவும் ஜீவா மற்று ஆனந்தியின் நடிப்புக்காக வேணுமானல் பார்க்கலாம்.

ஒரு சில காட்சிகள் அழகு. உதாரணத்திற்கு பொய்யைப் பற்றி ஜீவா நினைத்துக் கொள்ளும் அந்த ஆடோவில் செல்லும் காட்சி.

ILA (a) இளா said...

நல்ல விமர்சனம். ட்ரெயிலர் நல்லாதான் ஓட்டினாங்க. மெயின் பிக்சர் காலி போல இருக்கு.

Unknown said...

பிரகாஷ், சிவா, இராம், ப்ரியன்,மை ஃபிரண்ட், புபட்டியன்,கைப்புஸ்,அகிலன்,புலி,முனிராஜ்,நந்தா,இளா அனைவரது வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

Unknown said...

//த.அகிலன் said...
நீங்க ஐடியிலா இருக்கிறிங்க தேவ்?//

YES