நீரைப் போல்
நினைவுகளைப் போல்
சில நிமிடங்களையும்
தேக்கிக் கொள்ள முடிந்தால்......
பருவங்களைப் போன்றே
சில தருணங்களும்
மீண்டும் வரக்கூடுமென்றால்...
வாழ்வதற்கான வாய்ப்பு
மற்றுமொரு முறை
வழங்கப்படுமானால்....
அப்போதேனும்
மிகச் சரியாய் வாழ
முயன்று பார்க்கலாம்தான்..
என்ன செய்ய?
அடித்துத் திருத்தி
மீண்டும் எழுத
கவிதையில்லை வாழ்க்கை!
-காயத்ரி
வாழ்க்கையையும் அடித்து எழுத முடியுமென்றால்? நினைவுகளை நம்மால் அழிக்க முடியுமானால்? மீண்டும் வாழ்வதற்கான வாய்ப்பு கிடைத்தால்?
ஜோயலும் க்ளெமென்டைனும் இருவேறு துருவங்கள். இருவரும் தற்செயலாக சந்தித்து காதல் வயப்படுகின்றனர். சீராகச் செல்லும் அவர்களது உறவில் சிறு சிறு ஊடல்கள். சண்டைகள். எதற்குமே எளிதில் உணர்ச்சி வசப்படும் க்ளெமென்டைன் ஜோயலுடனான உறவைத் துறக்க நினைக்கிறாள். லகுனா(Lacuna Inc.) என்ற நிறுவனம் மூளையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நினைவுகளை மட்டும் அழிப்பதை அறிந்து அவ்ர்கள் மூலமாக ஜோயல் குறித்த நினைவுகளை அழித்துவிடுகிறாள்.
இதை நண்பர்கள் மூலம் அறியும் ஜோயல் தானும் அதே நிறுவனத்தின் மூலமாக க்ளெம்ன்டைனின் நினைவுகளை அழிக்கச் செல்கிறான். தற்காலத்தில் இருந்து ஆரம்பித்து கடந்த கால நினைவுகள் அழிக்கப்படுகின்றன. அவன் க்ளெம்ன்டைனுடன் கழித்த இனிமையான பொழுதுகள் அவன் ஆழ்மனதிற்கு தெரிகின்றது. அவன் க்ளெம்ன்டைனை முழுமையாக இழக்கப் போவதை உணர்கிறான். அவளின் நினைவுகளை அழியாமல் காப்பதற்கு முயல்கிறான். அவன் அதில் வென்றானா, கடந்த கால நினைவுகள் அழிந்த க்ளெம்ன்டைனும் ஜோயலும் மீண்டும் இணைவார்களா என்பதை வெள்ளித்திரையில் காண்க. இந்த படத்தின் முழுக்கதையும் கூறிவிட்டால் படம் பார்க்கும்போது அடுத்தடுத்த காட்சிகள் தரும் ஆச்சரியங்களைத் தவறவிடக்கூடும்.
படத்தில் ஜோயல்-க்ளெமென்டைன் காதலைத் தவிர லகுனா நிறுவனத்தின் தலைமை மருத்துவருக்கும் அதில் பணிபுரியும் மேரிக்கும் இடையேயான உறவு ஒரு சிறுகதை. இது சற்றும் எதிர்பாராத நேரத்தில் திரைக்கதையில் ஒரு திருப்பத்தைக் கொண்டு வரும் கிளைக்கதை. அதேபோல் க்ளெம்ன்டைனின் நினைவுகளை அழித்த பேட்ரிக் அவள்பால் ஈர்க்கப்பட்டு க்ளெமென்டைன் லகுனா நிறுவனத்திடம் ஒப்படைத்த ஜோயலின் அன்பளிப்புகளைக் கொண்டே அவளது அன்பைப் பெற முயற்சிப்பது சுவாரசியம்.
கதாநாயகன் ஜோயல் ஆக ஜிம் கேரி(Jim Carrey) நடித்திருக்கிறார். ஜிம் கேரியின் வழக்கமான நகைச்சுவை கதாபாத்திரங்களில் இருந்து வெகுவாக மாறுபட்ட ஜோயல் கதாபாத்திரத்தில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். ஆரம்பக் காட்சிகளில் வாழ்க்கையில் விரக்தியடைந்த இளைஞனாகவும் நினைவுகள் அழிக்கப்படும்போது அதை தடுத்து நிறுத்த துடிக்கும்போதும் ஆழ்மனதின் மூலமாக க்ளெமென்டைனின் நினைவுகளை அசைபோடும்போதும் நடிப்பில் அசத்தியிருக்கிறார்.
கேட் வின்ஸ்லெட்(Kate Winslet) க்ளெம்ன்டைனாக நடித்திருக்கிறார். எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு வேகமாக பேசுவதிலும் முகபாவங்களை சட்டென மாற்றுவதிலும் சிறப்பாக செய்திருக்கிறார். இந்த படத்திற்காக சிறந்த நடிக்கைக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். Kirsten Dunst, Elijah Wood, Mark Ruffalo ஆகியோரும் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றது. காலத்தில் முன்பின்னாக செல்லும் காட்சியமைப்புகள் பார்வையாளர்களுக்கு குழப்பம் ஏற்படாத வகையில் அமைக்கப்பட்டுள்ளன. க்ளெம்ன்டைன் கதாபாத்திரத்தின் மனநிலைக்கு ஏற்றவாறு அவர் தலைமுடி நிறத்தையும் மாற்றிக்கொள்வது போல் அமைத்திருப்பது காட்சி நட்க்கும் காலத்தை எளிதாக அறிய உதவுகிறது. கதாபாத்திரங்களின் வடிவமைப்பும் திரைக்கதையில் அடுத்தடுத்து ஏற்படும் திருப்பங்களும் நம்மைப் படத்துடன் ஒன்றவைக்கின்றன.
ஒவ்வொரு முறையும் இந்த திரைப்படம் குறித்து எழுத அமரும்பொழுது இந்த படம் குறித்த நினைவுகள் கட்டிப்போட்டுவிடுகின்றன. நினைவுகளை அழிப்பது குறித்தும், இந்த படத்தின் கதாபாத்திரங்கள் குறித்தும் காதல் ஏற்படுத்தும் ஆச்சரியங்கள் குறித்துமான சிந்தனைகள் மனதை ஆட்கொள்கின்றன. உலகில் யாராலும் எளிதில் தீர்க்க முடியாத புதிர் மனித மனம். அதை விடக் கடினமான புதிர் காதல் தான் இல்லையா...
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
ஜிம் கேரி நடிச்ச ஒரு உணர்வு பூர்வமான படமான்னு பார்க்காம விட்டது தப்புத் தான் போலிருக்கு.இந்த வாரமே பார்த்திடறேன்...
ஜிம் கேரி மியான்மர் போராளி ஆங்-சான் சூ கீ பத்தி வெளியிட்ட வீடியோத் துணுக்கைப் பார்த்தீங்களோ??
\\"Eternal Sunshine of the Spotless Mind"
நோட் பண்ணிக்கிட்டேன்..
ஒரு பெரிய லிஸ்டா போய்க்கிட்டே இருக்கே...
சுதர்சன்
பார்த்துட்டு பிடிச்சுதான்னு சொல்லுங்க ;)
வீடியோ இன்னும் பாக்கல..கறேன்..
கோபிநாத்
நோட் பண்ணுங்கண்ணா.நோட் பண்ணுங்கண்ணா :))
புலி
புலிவாலை புடிச்ச கதை தான் ;)
கப்பி பய,
ESOM அருமையான படம். அதைப்பற்றி ஜன.2006-இல் எழுதியது இங்கே. நேரமிருந்தால் படியுங்கள்.
http://agaramuthala.blogspot.com/2006/01/eternal-sunshine-of-spotless-mind.html
நன்றி.
படம் குறித்து ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க சுந்தர்.
உரல் தான் பாதி கட் ஆயிடுச்சு :)
http://agaramuthala.blogspot.com/2006/01/eternal-sunshine-of-spotless-mind.html
பகிர்வுக்கு நன்றி!
ஒ ... கீத்துக்கொட்டாய்-ல வந்ததை எப்படி மிஸ் பண்ணேன் நன்றி கப்பி .
.. ஹம் ... சரி.. இங்கயும் தலைப்புக்கு அர்த்தம் சொல்லலியே ... அலெக்சாண்டர் போப்பின் ஒரு Quote என்பது மட்டும் தெரிகிறது .. ஆனால் அர்த்தம் ?
முழு படமும் இன்னிக்கி மறுபடியும் பார்த்து முடிச்சிட்டேன்..எவ்வளவு முறை பார்த்தாலும் அலுக்காத படம் :)திரைகதையை ஒவ்வொறு முறையும் வியக்காமல் இருக்க முடியவில்லை:)
People should read this.
Post a Comment