Tuesday, November 27, 2007

பில்லா-2007(??) பாடல்கள்


தல'யின் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கப்படும் படம் பில்லா 2007. ஏற்கனவே SRK நடித்தும் வெற்றி பெற்றது Don என்பது எல்லாருக்கு தெரிஞ்ச விஷயம்தானே. அதுக்கு முன்னாடி வளர்த்தி நடிகர் நடிச்சதாமே. இங்கே அதையே ரஜினி பண்ண, SRK செஞ்சத அஜித் பண்ண வந்திருக்காரு.

இசை: யுவன் சங்கர் ராஜா.
(அதிகமா ரீமிக்ஸ் பாடலகள் செய்திருப்பதாலோ என்னவோ இந்த ரீ மிக்ஸ் படத்திற்கும் இவரையே இசையமைப்பாளர் ஆக்கி இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாது விஷ்ணுவர்த்தனின் படத்துக்கு இதுவரை இசை அமைத்தவரும் இவரே.(குறும்பு, அறிந்தும் அறியாமலும், பட்டியல் ) மூன்றிலுமே ரீமிக்ஸ் பாடல்கள் கலக்கியது நினைவு இருக்கும்.

இந்தப் படத்தில் மொத்தம் 6 பாடல்கள் ஒரு தீம் இசை உட்பட.


My Name is Billa - பாடியது நவீன் மற்றும் கே. கே.
இது ஒரு ரீமிக்ஸ் பாட்டு என்பதால் அதிகம் மெனக்கெடாமல் பழைய பாட்டுக்கு புது இசை சேர்த்துள்ளார் யுவன். ஆனால் கிணத்துக்குள்ளே இருந்து பாடுவது மாதிரி ரெகார்டிங். இந்தப் பாட்டை இப்படித்தான் கெடுக்கனும் முடிவு பண்ணி செஞ்சு இருக்காங்க. Sound Recordingல் பாடல் கேட்பதே இல்லை, வெறும் சத்தம் தான்..(1.5/5)

செய், ஏதாவது செய்: பாடியது நித்யா ஸ்ரீ மஹாதேவன்.
ஏதோ ஒரு ஐட்டம் பாட்டு போல் இருக்கு. கேட்க நல்லாவும் வார்த்தைகளில் கொஞ்சம் அளவும் மீறி இருக்காங்க. எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கும் இன்னொரு பாடல். Sounds like தீ தீப்பிடிக்க remix. Nothing Special(1.5/5)

Theme Music- Yuvan Sankar Raja.
கேட்க நல்லா இருக்கு, கிதார் உபயோகப்படுத்திய விதம் அருமை. பழைய கிதார் இசையை electronic கிதாரில் கொண்டு வந்த விதம் புதுசு.

நான் மீண்டும் நானாக வேண்டும்: பாடியது தீபிகா.
மேலும் ஒரு ஐட்டம் பாடல். விமர்சனம் செய்யும் அளவுக்கு ஒன்றும் விஷேசம் இல்லாத பாடல் (1/5). கிதார் விளையாட்டு இதிலும் உண்டு. அதனால தான் 1/5, இல்லைன்னா (0/5)

சேவல் கொடி: பாடியது விஜய் ஜேசுதாஸ்.
இந்தப் படத்தில் முதன்மையான பாடல் இதுதான். முருகனை போற்றிப் பாடுமாறு அமைந்திருக்கிறது இந்தப்பாடல். அநேகமான யுவனின் குத்து பாடல்களில் முதல் 5 க்குள் வரும்படியான பாட்டு. அதேபோல் முருகனைப் போற்றி பாடிய பாடல்களில், சூப்பர் குத்துப் பாட்டு இதுவாகத்தான் இருக்கும். குத்துன்னா குத்து... செம குத்து. தல ரசிகர்களுக்கு கொண்டாட்டமான பாட்டு இது. அதுவும் அஜித்க்கு intro பாட்டா இதுவே இருந்தா பிரமாண்டமான ஓப்பனிங்கா இருக்கும். (4/5)

வெத்தலைய போட்டேண்டி: பாடியது ஷங்கர் மஹாதேவன்
இன்னும் ஒரு ரீமிக்ஸ் பாடல் மாதிரி ஆனா ரீ மிக்ஸ் இல்லை. கொஞ்சம் குத்து கொஞ்சம் மேற்கத்திய இசைன்னு கலக்கிய விதம் சொல்லிக்கொள்ளும்படியாக இருக்கு. (2.5/5)

ஆக மொத்தம் பில்லா பாடல்களுக்கு கீத்துக்கொட்டாய் குடுக்கும் மதிப்பெண் * * (2/5)

13 comments:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

எனக்குப் பிடித்ததும் சேவல் கொடி பாட்டு தான்..

Mohandoss said...

//சேவல் கொடி: பாடியது விஜய் ஜேசுதாஸ்.


அநேகமான யுவனின் குத்து பாடல்களில் முதன்மை இந்தப்பாட்டுக்கு கிடைக்கும். குத்துன்னா குத்து செம குத்து. தல ரசிகர்களுக்கு கொண்ட்டாடமான பாட்டு இது. அதுவும் அஜித் intro பாட்டா இருந்தா பிரமாண்டமான ஓப்பனிங்கா இருக்கு. (4/5)//

இல்லை நீங்க இந்தி டான் படத்தில் 'பிள்ளையார்' பாட்டு வரும், சரியாக நினைவில் வரவில்லை தமிழ் பில்லா பாட்டு. ஆனால் 'பில்லா' இல்லாமல் போலியின் அறிமுகப்பாட்டு இது!

இராம்/Raam said...

பாட்டெல்லாம் கொஞ்சம் சொதப்பல்ஸ் ஆப் இந்தியா தான்... :(

படத்திலே இந்த பிழ்ழா பேஸ் மாட்டான்'னு தல டயலாக் பேசாமா இருந்தா சரிதான்... :)

PAISAPOWER said...

ஏமாற்றம்தான் மிஞ்சியது....

Boston Bala said...

நன்றி இளா. இனிமேல்தான் கேக்கணும்

நாகை சிவா said...

மோகன் தாஸ், வெத்தைலையை போட்டேன் டி பாடல் தான் இரண்டாவது ரஜினிக்கு அறிமுக பாடலாக எனக்கு ஞாபகம்.

பாட்டை பத்தி என்னத்த சொல்ல.. எதிர்பார்த்த இரண்டு பாட்டும் ஒத்துக்கிச்சு...

சேவல் பாட்டு நல்லா தான் இருக்கு...

செய் எதாவது செய் பாட்டு எனக்கு பிடிச்சு இருந்துச்சு.. ஆனால் யுவனின் தீப்பிடிக்க மற்றும் புதுபேட்டையின் வாசம் இந்த பாடலில் அதிகம் தான்.

G.Ragavan said...

yuvan disappoints a lot nowadays. he again proved hez just a mediocre.

சேவல் கொடி நல்லாருக்கு. வெத்தலையப் போட்டேன் தாவலை. செய் ஏதாவதும் சுமாராயிருக்கு....ஆனா கேட்டாப்புல இருக்கு. மை நேம் இஸ் பில்லாவை இப்பிடிக் கொலை செஞ்சிருக்க வேண்டாம்.

கப்பி | Kappi said...

'மை நேம் இஸ் பில்லா' கேட்டு காதுல ரத்தமும் கண்ணுல தண்ணியும் வந்துடுச்சு :))

சேவல் கொடி ஹிட் ஆயிடும்..மத்த பாட்டெல்லாம்..ம்ஹூம்..யுவன் ரொம்ப கஷ்டப்படாம போட்டிருப்பார் போல :))

Unknown said...

ஏந்தான் இப்பிடி பழய நல்ல பாட்டுகளையெல்லாம் போட்டு கொல்றானுங்களோ தெரியல.

சட்டியில இருந்தா அகப்பைக்கு என்ன அகப்படாமலா போய்ரும்?

Mohandoss said...

//மோகன் தாஸ், வெத்தைலையை போட்டேன் டி பாடல் தான் இரண்டாவது ரஜினிக்கு அறிமுக பாடலாக எனக்கு ஞாபகம்.//

இல்லை வெத்தலையைப் போட்டேண்டி மற்ற ரஜினியின் அறிமுகப்பாடலில்லை.

அந்தப்பாடல் படத்தில் 'ஸ்ரீபிரியா'விற்கு பில்லா பற்றிய ரகசியம் தெரிந்ததும் வரும் பாடல். அதற்கு முன்னமேயே இந்தப்பாடல் வந்துவிடும்.

அபுல் கலாம் ஆசாத் said...

அன்புடையீர்,

ஓரிரு பாடல்களின் தோல்விக்கு யுவனை மட்டும் குறை சொல்வதில் பொருளில்லை.

ஒவ்வொரு தொலைக்காட்சியும் பழம்பாடல்களை ஒளிபரப்பி அவையும் இன்றைய இளையவர்களுக்கு நன்கு அறிமுகமாகியிருக்கும் இந்நேரத்தில் மறுகலவைக்கான பாடல் வரிகளில் அதிக கவனம் செலுத்தாமற்போனதும் தவறு. இது எனது பார்வை.

என்னுடைய கோணத்தில் நீங்கள் 3/5 என்றே கொடுத்திருக்கலாம் :-)

பாடல்கள் குறித்த எனது பார்வையை கீத்துக் கொட்டாய் வாசகர்கள் படிக்க விரும்பினால், கீழே சுட்டுங்கள்

http://ennam.blogspot.com/2007/11/blog-post_30.html

அன்புடன்
ஆசாத்

Unknown said...

Many persons don't know what exactly the meaning of the word "remix". Yes yuvan has done remix in Kurumbu but not in Arindhum Ariyamalum and Pattial. Summa orukai mathiri thottukitta athu remix kidaiyathu.

Even vethaliya pottendi is not 100% remix, yuvan has used only the pallavi or only the first two lines (same tune) from the old tune.

http://www.thuligal.com/index.php/billa-music-review

உடன்பிறப்பு said...

வந்தது பில்லா
நிறைஞ்சது கல்லா