ஒரு நாள் முழுக்க என்ன நடந்ததென்றே தெரியாமல் அனைத்தும் மறந்துபோனால் எப்படியிருக்கும்? அன்று நமக்கு என்ன நேர்ந்தது, என்ன செய்துகொண்டிருந்தோம் என்பதெல்லாம் பெரும் புதிராக இருக்குமல்லவா? அன்று நடந்த நிகழ்வுகளை எப்பாடுபட்டாவது கண்டுபிடித்துவிட துடிப்போம் அல்லவா?
வழக்கமான மசாலா கதைகளைத் தவிர்த்து வித்தியாசமான கதையுடன் சுவாரசியமான நெருடலில்லாத திரைக்கதையுடன் எடுக்கப்பட்ட திரைப்படம் Anukokunda Oka Roju.
சஹஸ்ரா பின்னணி பாடகி. கல்லூரி மாணவி. ஒரு நாள் தன் தோழியுடன் ஒரு பார்ட்டிக்கு செல்கிறார். அங்கு அவருக்குத் தெரியாமல் நண்பர்கள் அவருக்கு போதை மருந்து தந்துவிடுகிறார்கள். சஹஸ்ரா அங்கிருந்து தானாகக் கிளம்பிவிடுகிறார். வீட்டிற்கு வந்து தூங்கி விழிக்கும் சஹஸ்ரா இரண்டு நாட்கள் கடந்துவிட்டதை உணர்கிறார். தான் தொடர்ந்து இரண்டு நாட்கள் தூங்கிவிட்டதாக நினைக்கிறார். ஆனால் சில நாட்கள் கழித்து அவரை ஒருவன் கொலை செய்ய முயற்சிக்கிறான். தான் சுயநினைவு இழந்த அன்று ஏதோ விபரீதம் நடந்திருப்பதை உணர்கிறார் சஹஸ்ரா. அன்று தன்னை வீட்டில் விட்ட டாக்ஸி டிரைவர் உதவியுடனும், போலீஸ் அதிகாரி ஜெகபதி பாபு உதவியுடனும் பல்வேறு துப்புகளைப் பின் தொடர்ந்து அன்று என்ன நடந்ததெனக் கண்டுபிடிக்கிறார்கள்.
படத்தின் முற்பாதியில் காமெடியாகவும் பின்னர் சஹஸ்ராவிற்கு அன்று என்ன நடந்ததென சஸ்பென்ஸை எழுப்பிவிட்டு பிற்பாதியில் ஒவ்வொரு முடிச்சாக அவிழ்த்து சுவாரசியமாக படமாக்கியிருக்கிறார்கள்.
சஹஸ்ராவாக 'காதல் அழிவதில்லை' புகழ்(?!)சார்மி. படத்தின் ஆரம்பத்தில் ஜாலியான கல்லூரி மாணவியாகவும் பின்னர் ஒரு நாள் என்ன நடந்ததெனத் தெரியாமல் தவிப்பதிலும் அம்மணி வெளுத்துக் கட்டியிருக்கிறார். அவர் நடித்து நான் பார்த்த இரண்டு மூன்று படங்களில் இந்த படத்தில் ரொம்பவே அழகாகயிருக்கிறார். சிறப்பாக நடித்திருக்கிறார்.
சஸ்பென்ஷனில் இருக்கும் போலீஸ் அதிகாரியாக ஜெகபதி பாபு. தெனாவெட்டான கதாபாத்திரத்திற்கு மனிதர் கச்சிதமாகப் பொருந்துகிறார். நக்கலான டைமிங் டயலாக்குகளும் பின்னர் சார்மியை ஈர்ப்பதற்காக அவர் செய்யும் சில்மிஷங்களும் கலக்கல்ஸ் ஆப் ஹைதராபாத். டாக்ஸி டிரைவராக நான் இதற்கு முன்னர் பார்த்தேயிராத ஹீரோ. பெயர் சஷாங்க்-காம். நன்றாகவே நடித்திருக்கிறார்.
படத்தின் ஆரம்பத்தில் சஹஸ்ரா தங்கியிருக்கும் அபார்ட்மெண்டில் நடக்கும் காமெடி காட்சிகள் படு ஜாலி. அதிலும் தம்முடு வாத்தியார் ஒருவர் கலக்கியிருக்கிறார். அரைகுறை ஆங்கிலத்தில் அனைவரிடமும் ஆப்பு வாங்குவதில் ஸ்பெஷலிஸ்ட். ஆங்கிலத்தை பிச்சி உதறுவார். ஒரு உதாரணம் - 'You dance. I glance'. ஒரு ஹிந்தி ஆண்ட்டியுடன் இவர் சண்டை கட்டும் காட்சிகள் செம காமெடி.
நாயகி பின்னணி பாடகி. ஆனாலும் பாடல்கள் ஓகே ரகம் தான். த்ரில்லர் படமென்று காட்சிகளைத் த்ரில் ஆக்குவதாக நினைத்து பின்னணி இசையை ஓவர் இரைச்சல் ஆக்காமல் சிறப்பாகவே அமைத்திருக்கிறார் இசையமைப்பாளர். ஜாலியான வசனங்கள் படத்தின் பெரும்பலம். மிகவும் சீரியசான காட்சியில் கூட யாராவது டைமிங் ஜோக் அடிக்கிறார்கள். படத்தின் ஆரம்ப காட்சிகளிலேயே எதிர்பார்ப்பை உண்டாக்கி அதற்கேற்றவாறு சற்றும் தொய்வில்லாமல் படமாக்கியிருக்கிறார் இயக்குனர்.
மொத்தத்தில் அனுகொகுண்ட ஒக்க ரோஜு - மன்ச்சு ஃபிலுமு.

6 comments:
நல்ல படம், கொஞ்ச நாள் முன்னாடியெ 'மா' டிவில போட்டுடாங்க.
ஏற்கனவே படிச்ச மாதிரி இருக்கே?
கலக்கல் படம்; நல்ல விமர்சனம்
கப்பிகாரு!
சார்மிய நம்பி பாக்கலாமா சொல்லுங்க :)
இம்சை
_/\_ :)
prakash
//ஏற்கனவே படிச்ச மாதிரி இருக்கே?//
என்ன தல இப்படி சொல்லிட்டீங்க..ஏற்கனவே யாராவது இதே படம் பத்தி எழுதியிருக்காங்களோ? :)))
boston bala
நன்றி தல :)
நாகை சிவா
சார்மிக்காகவே கண்டிப்பா பாக்கலாம்யா :))
வெட்டி வேலையை நீங்கள் எடுத்துக்கொண்டுவிட்டீர்களா ?
;-)))
Post a Comment