பட்டையைக் கிளப்பும் வசனங்கள், ஹம்ஃப்ரீ போகார்ட்டின்(Humphrey Bogart) நடிப்பு-வசன உச்சரிப்பு, இங்ரிட் பெர்க்மெனின் (Ingrid Bergman) அழகு, இனிமையான பின்னணி இசை, பாடல்கள், சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரங்கள், காட்சியமைப்புகள் - Casablanca திரைப்படத்தைப் பரிந்துரைக்க இதற்கு மேல் வேறென்ன காரணம் வேண்டும்.
இரண்டாம் உலகப் போர் நடந்த காலகட்டத்தில் ஆப்பிரிக்காவிலுள்ள கேசப்பிளாங்கா என்ற ஊரில் நடக்கும் கதை. புரட்சியாளர்களும் பொதுமக்களும் கேசப்பிளாங்கா வழியாக, போலி விசா மூலமாக ஜெர்மன் நாசி படைகளிடமிருந்து அமெரிக்காவிற்கு தப்பிக்கிறார்கள். விக்டர் ஜெர்மனிக்கு எதிராக கலகம் செய்யும் புரட்சியாளன். மனைவி இல்சாவுடன் (Ingrid Bergman) அமெரிக்கா தப்பிச் செல்ல கேசபிளாங்கா வருகிறான். ஆனால் ஜெர்மன் இராணுவ அதிகாரி உள்ளூர் காவல் அதிகாரி மூலமாக அவர்களுக்கு விசா கிடைக்காமல் தடுக்க முயல்கிறார்.
ஒரு தரகன் மூலமாக போலி விசா வாங்குவதற்கு ரிக்(Humphrey Bogart) நடத்தும் கஃபே-விற்கு வருகிறார்கள். அந்த தரகன் விசா பத்திரங்களை பாதுகாப்பிற்காக ரிக்கிடம் ஒப்படைத்துவிட்டு வரும்போது போலீசாரால் கொல்லப்படுகிறான்.
ரிக் இல்சாவின் முன்னாள் காதலன். புரட்சியாளனான ரிக், சில வருடங்களுக்கு முன் இல்சாவை பாரீஸில் சந்திக்கிறான். ஏற்கனவே விக்டரை மணந்த இல்சா, விக்டர் போராட்டத்தில் இறந்துவிட்டதாக தகவலறிந்து துக்கத்தில் இருக்கிறாள். ரிக்-கும் இல்சாவும் காதல் வயப்படுகிறார்கள். பாரீஸை ஜெர்மன் ரானுவம் கைப்பற்றிய நாளில் ரிக்-கும் இல்சாவும் அங்கிருந்து தப்பிக்க முடிவெடுக்கிறார்கள். அங்கிருந்து கிளம்பும் நேரத்தில் விக்டர் உயிருடன் இருப்பதாக இல்சாவிற்கு செய்தி வருகிறது. ரிக்கைப் பிரிந்து விக்டரைத் தேடிச் செல்கிறாள் இல்சா. அவளைக் காணாத ரிக் கேசபிளாங்காவிற்கு தனியாகக் கிளம்பி வந்து கஃபே நடத்துகிறான். அங்கிருந்தபடியே போராளிகளுக்கும் மறைமுகமாக ஆதரவளிக்கிறான்.
பல நாட்களுக்குப் பிறகு கஃபேயில் சற்றும் எதிர்பாராத இந்த சந்திப்பில் ரிக்-கும் இல்சாவும் அதிர்ச்சியடைகிறார்கள். விக்டரும் இல்சாவும் தப்பிச் செல்லத் தேவையான விசா பத்திரங்கள் ரிக் வசம் உள்ளன. விக்டரும் இல்சாவும் பத்திரமாகத் தப்பிச் செல்வார்களா, ரிக்-இல்சா மீண்டும் இணைவார்களா, ஜெர்மன் இராணுவ அதிகாரியால் விக்டருக்கும் ரிச்சர்டிற்கும் இருக்கும் ஆபத்து நீங்குமா என்பதை வெள்ளித் திரையில் காண்க.
முக்கோனக் காதல் கதைகளுக்கெல்லாம் முன்னோடி என்று கூறத்தக்க அளவு மிகச் சிறப்பாக எடுக்கப்பட்ட திரைப்படம் Casablanca. அதே நேரத்தில் இதை காதல் படம் என்று வகைப்படுத்தவும் முடியாது. இரண்டாம் உலகப் போர் நடந்த காலகட்டத்தில் ஜெர்மன் நாஜிப்படைகள் செய்த கொடுமைகளையும், பொதுமக்கள் பட்ட அவதிகளையும், புரட்சியாளர்கள் சந்தித்த போராட்டங்களையும் வசனங்கள் மூலமாகவும் சிறுசிறு கதாபாத்திரங்கள், ரிக் நடத்தும் கஃபேயில் நடக்கும் காட்சிகள் மூலமாகவே உணர்த்தியிருப்பார்கள். அமெரிக்கா தப்பிச் செல்ல விசா வாங்குவதற்காக உயிரையும் பணயம் வைக்கத் தயாராய் இருப்பதும், ஜெர்மன் இராணுவ வீரர்களிடமிருந்து தப்பிக்க தங்களை ஆங்கிலேயர்களாகக் காட்டிக்கொள்ள அரைகுறை ஆங்கிலம் பேசும் தம்பதிகளும், தனக்கு விசா கிடைக்காவிட்டாலும் தன் குடும்பத்தார் தப்பித்தால் போதுமெனத் துடிக்கும் கதாபாத்திரங்கள் மூலமாகவும் மிகச் சிறப்பாக அன்றைய சூழலை படம்பிடித்திருக்கிறார்கள்.
இருதலைக் கொள்ளியாகத் துடிக்கும் இல்சா, அவள் மீது கொண்ட காதல் சற்றும் குறையாத ரிக், அதைப் பற்றி ஏதுமறியாமல் தன் மனைவி மேல் அளவுகடந்த அன்பை வைத்திருக்கும் விக்டர் என மூன்று கதாபாத்திரங்களும் பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள். ரிக்-கிற்கும் இல்சாவிற்குமிடையேயான காதல் காட்சிகளும் வசனங்களுமே இந்த படத்தைத் திரும்பத் திரும்ப பார்க்க வைக்கிறது.
ரிக்-காக ஹம்ஃப்ரி போகார்ட்(Humphrey Bogart). வசன உச்சரிப்பும் பாடி லேங்குவேஜும் முகபாவங்களும்...அவரின் ரசிகனாகிவிட்டேன். அதே போல் இங்க்ரிட் பெர்க்மெனின் அழகு, நடிப்பு. ஒரே காட்சியில் வசனங்களுக்கேற்றவாறு சட்டென மாறும் முகபாவங்கள் ரசிக்கவைக்கும்.
படத்தில் பாடல்களும் உண்டு. குறிப்பாக ரிக்-கின் கஃபேயில் பாடகராக இருக்கும் சாம் இல்சாவின் விருப்பத்திற்காக பாடும் ஒரு பாடல். அந்த பாடலின்போது இங்க்ரிட் பெர்க்மெனின் நடிப்பும் பாடலின் முடிவில் போகார்ட்டின் எண்ட்ரியும் அட்டகாசம்.
ஓரிரு காட்சிகள் சிறிது நாடகத் தன்மையோடு இருப்பதாகத் தோன்றினாலும் அடுத்தடுத்து வரும் காட்சிகளும் வசனங்களும் அதை மறக்கச் செய்துவிடும். இதுவரை நான்கைந்து முறை பார்த்த பின்னும் அலுப்படையவில்லை.
உலகின் மிகச் சிறந்த திரைப்படங்களின் பட்டியல்களில் தவறாமல் இடம்பிடிக்கும் திரைப்படம் Casablanca. மூன்று ஆஸ்கர் விருதுகளை வென்றது.
படம் முடிகையில் முகத்திலே ஏற்படும் புன்னகை சில மணி நேரங்களுக்காவது நம்மோடு இருக்கும்.

8 comments:
எள் னா எண்ணையா இருக்கியே கப்பி :(
மதர் ஆப் லவ் ஸ்வ்ஸ்டோரிஸ் னு மனசுல எழுதிட்டிருந்தன்யா :)
எல்லாம் போன பிறகு போகார்ட் தனியா உட்கார்ந்து குடிப்பானில்ல.அந்த சீன் சூப்பர்யா..நான் போகமாட்டேன் பாஸ் னுசொல்லியப்டி பியானாவ வாசிக்கும் அந்த இரவு காட்சி நல்லா வந்திருக்கும்..
நல்லா இருய்யா நல்லா இரு
CASABLANCA - Must Watch movie right
அய்யனார்
//மதர் ஆப் லவ் ஸ்வ்ஸ்டோரிஸ் னு மனசுல எழுதிட்டிருந்தன்யா//
அன்னிக்கு நம்ம சாட்-ல ஓடிட்டிருந்த மேட்டர் :))
//பியானாவ வாசிக்கும் அந்த இரவு காட்சி நல்லா வந்திருக்கும்..//
ஆமா..அதையும் சேர்த்திருக்கலாமே..மிஸ் ஆயிடுச்சே..ஆனா இப்படி சொல்லிட்டு போனா படத்துல ஒவ்வொரு சீனா எடுத்துப் போட்டு நல்லாயிருக்குன்னு சொல்லலாம்ல அய்ஸ்..அத்தனை இருக்கே :)
நன்றி!
தேவ்
ஆமாண்ணே ஆமா...கண்டிப்பா பாருங்க :)
அய்ஸ்,
மறந்துட்டனே..நீங்களும் எழுதறீங்கல்ல? :)
எனக்குப்பிடித்த படங்களிலொன்று. இந்தப் படம் பார்ப்பதற்குப் பல வருடங்களுக்கு முந்தியே இந்தப் படத்தைப்பற்றி நிறைய இடத்தில (புனைவுகளில்கூட) பேசியிருந்தார்கள். எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ததென்றே சொல்ல வேண்டும். நானும் படம் முடிந்தபோது இங்க்ரிட் பேர்க்மனுக்கும் (முக்கியமாக) ஹம்ப்ரே போகார்ட்டுக்கும் விசிறியாகியிருந்தேன். :) அவர்களுடைய படங்களைத் தேடித்தேடிப் பார்க்கவும் தொடங்கினேன்.
படித்த துணுக்குகளில் ஒரு விசயம் play it again, samனு இங்க்ரிட் பேர்க்மன் சொல்லுவாங்கன்னு. ஆனா, அப்படியொரு வசனம் வரல. கொஞ்சம் மாத்தி வந்தது.
இந்தப் படத்தைப்பொறுத்தவரைக்கும் ஒரு சுவாரசியமான விதயமிருக்கு. படம் எப்படி முடியப்போகிறது என்பதை யாருக்கும் தெரியாமல் வைத்திருந்தார்களாம். அவ்வளவு ஏன், நடிகர்களுக்கே தெரியாதாம். கடைசியில் விமானத்தில் யார் ஏறுவார்கள் என்று தெரியாதபடியால் இரண்டு நடிகர்களின் நடிப்பிலும் இயக்குநர் எதிர்பார்த்த தடுமாற்றங்களும் குழப்பங்களும் இருந்ததாம். சுவாரசியமாயில்ல?!
இந்தப் படத்தின் இசையும் எனக்குப்பிடித்ததொன்று.
இந்தப் படத்தை அடியொற்றி ராபர்ட் ரெட்ஃபோர்டும் unbearable lightness of beingஇன் லேனா ஒலினும் நடித்து, சிட்னி பொலாக் இயக்கி Havanaன்னு ஒரு படம் வந்தது. Casablancaவில இருந்து நிறைய உருவியிருப்பார்கள்.
அய்யனார்: நீங்களும் எழுதுங்களேன். உங்கள் பார்வையில் எப்படியிருக்கிறது என்று படிக்க ஆவல்.
ஒரு நேயர் விருப்பம் (மாதிரி). Casablance எழுதிட்டீங்க. அடுத்து Sabrina எழுதுங்களேன். ஹம்ப்ரே போகார்ட் நடித்த பழைய Sabrina + ஹாரிசன் போர்ட் நடித்த புதுசு.
btw, இங்க யாராவது ஓட்ரே ஹெப்பர்ன் விசிறி இருக்கீங்களா? anybody up for 'Roman Holiday'? ;)
-மதிஎனக்குப்பிடித்த படங்களிலொன்று. இந்தப் படம் பார்ப்பதற்குப் பல வருடங்களுக்கு முந்தியே இந்தப் படத்தைப்பற்றி நிறைய இடத்தில (புனைவுகளில்கூட) பேசியிருந்தார்கள். எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ததென்றே சொல்ல வேண்டும். நானும் படம் முடிந்தபோது இங்க்ரிட் பேர்க்மனுக்கும் (முக்கியமாக) ஹம்ப்ரே போகார்ட்டுக்கும் விசிறியாகியிருந்தேன். :) அவர்களுடைய படங்களைத் தேடித்தேடிப் பார்க்கவும் தொடங்கினேன்.
படித்த துணுக்குகளில் ஒரு விசயம் play it again, samனு இங்க்ரிட் பேர்க்மன் சொல்லுவாங்கன்னு. ஆனா, அப்படியொரு வசனம் வரல. கொஞ்சம் மாத்தி வந்தது.
இந்தப் படத்தைப்பொறுத்தவரைக்கும் ஒரு சுவாரசியமான விதயமிருக்கு. படம் எப்படி முடியப்போகிறது என்பதை யாருக்கும் தெரியாமல் வைத்திருந்தார்களாம். அவ்வளவு ஏன், நடிகர்களுக்கே தெரியாதாம். கடைசியில் விமானத்தில் யார் ஏறுவார்கள் என்று தெரியாதபடியால் இரண்டு நடிகர்களின் நடிப்பிலும் இயக்குநர் எதிர்பார்த்த தடுமாற்றங்களும் குழப்பங்களும் இருந்ததாம். சுவாரசியமாயில்ல?!
இந்தப் படத்தின் இசையும் எனக்குப்பிடித்ததொன்று.
இந்தப் படத்தை அடியொற்றி ராபர்ட் ரெட்ஃபோர்டும் unbearable lightness of beingஇன் லேனா ஒலினும் நடித்து, சிட்னி பொலாக் இயக்கி Havanaன்னு ஒரு படம் வந்தது. Casablancaவில இருந்து நிறைய உருவியிருப்பார்கள்.
அய்யனார்: நீங்களும் எழுதுங்களேன். உங்கள் பார்வையில் எப்படியிருக்கிறது என்று படிக்க ஆவல்.
ஒரு நேயர் விருப்பம் (மாதிரி). Casablance எழுதிட்டீங்க. அடுத்து Sabrina எழுதுங்களேன். ஹம்ப்ரே போகார்ட் நடித்த பழைய Sabrina + ஹாரிசன் போர்ட் நடித்த புதுசு.
btw, இங்க யாராவது ஓட்ரே ஹெப்பர்ன் விசிறி இருக்கீங்களா? anybody up for 'Roman Holiday'? ;)
-மதி
அருமையான படம்க. ஹம்ஃப்ரி போகார்ட் தான் chain smoker போல உடல் மெலிந்து காட்சியளிப்பார்...
//ஓரிரு காட்சிகள் சிறிது நாடகத் தன்மையோடு இருப்பதாகத் தோன்றினாலும் அடுத்தடுத்து வரும் காட்சிகளும் வசனங்களும் அதை மறக்கச் செய்துவிடும்.//
ஆனா க்ளைமேக்ஸ் சினிமாத்தனம் தானே?
மதி
//இந்தப் படத்தைப்பற்றி நிறைய இடத்தில (புனைவுகளில்கூட) பேசியிருந்தார்கள்//
ஆமாங்க மதி..பரவலாகப் பேசப்படும் இல்லீங்களா..
//(முக்கியமாக) ஹம்ப்ரே போகார்ட்டுக்கும் //
அதே அதே!! :)
//play it again, sam//
அந்த சீன்ல பெர்க்மென் முகம் கண்ணுல இருக்கு..ஆனா வசனம் எப்படி வரும்னு ஞாபகம் இல்லையே :)
இந்த படம் குறித்த விவாதங்களில் பலரும் குறிப்பிடும், பலருக்கும் பிடித்த காட்சி இது..
//படம் எப்படி முடியப்போகிறது என்பதை யாருக்கும் தெரியாமல் வைத்திருந்தார்களாம். //
நானும் இதை எங்கோ படித்தேன்..ரொம்ப சுவாரசியமான தகவல் இது...இயக்குனர் கலக்கியிருக்காரே :))
//Sabrina எழுதுங்களேன்//
ஹம்ப்ரி போகார்ட் நடிச்சது பார்த்திருக்கேன்..ஹாரிசன் போர்ட் வெர்ஷன் இன்னும் பார்க்கலையே..பார்த்துட்டு எழுதிடுவோம்.. ;)
//ஓட்ரே ஹெப்பர்ன் விசிறி இருக்கீங்களா? anybody up for 'Roman Holiday'? ;)
//
ஒட்ரே ஹெப்பர்ன் பிடிக்காதுன்னு யாராவது சொல்வாங்களா என்ன? :))
Roman Holiday என் பட்டியல்ல இருக்குங்க..ஆனா கொஞ்சம் பின்னாடியிருக்கே ;)
நன்றி மதி! :)
சீனு
//அருமையான படம்க. ஹம்ஃப்ரி போகார்ட் தான் chain smoker போல உடல் மெலிந்து காட்சியளிப்பார்...
//
அவர் உடல்வாகே அப்படிதாங்க பாவம் :)))
//ஆனா க்ளைமேக்ஸ் சினிமாத்தனம் தானே?//
உங்களுக்கு சினிமாத்தனமாவா தோனுது? :)
நன்றி சீனு !
Post a Comment