Thursday, May 22, 2008

Outsourcedஇந்திய மென்பொருள் வல்லுநர்களை குறிப்பாக BPO ஆட்களை குறி வைத்து நக்கலாக எடுக்கப்பட்ட ஹாலிவுட் படம் இது. அமெரிக்க நகரத்தில் அமைந்திருக்கும் பலசரக்கு??!! ஆன்லைன் கடையின் கால் சென்டர் மேனஜர் இந்தியாவில் அமைந்திருக்கும் அவுட்சோர்ஸ் கால் சென்டருக்கு அனுப்பப்படுகிறான். அவனுடைய Cultural-difference பிரச்சினைகளை சிறிதாகவும் இந்திய கணினி வல்லுநர்களை கிண்டல் அடிப்பதில் பெரிதாகவும் விளக்கி சொல்லுவதில் வென்று இருக்கிறார் இயக்குநர்.

மும்பை ஏர்போர்ட் வந்து இறங்கி தன்னை அழைக்க வந்த டாக்ஸி டிரைவரை தவறவிடும் ஹீரோ(டோட் ஆண்டர்சன் todd andersan) தன்னை சுற்றும் வாடகை டாக்ஸி டிரைவர்களால் ஆட்டோவில் பயணிக்க ஆரம்பித்தலில் இந்தியவாழ்க்கை அவனுக்கு வரவேற்கிறது.வழியெங்கும் அழுக்கும்,ஏழ்மை இந்திய வாழ்க்கையும் அவனுக்கு ஏதோவொரு கிரகத்தில் வசிக்க போவதாக பயம் தொற்றிக்கொள்கிறது. மும்பையிலிருந்து காராபூரிக்கு இரயிலில் பயணம் செய்வதில் நமது கலாச்சாரத்தின் அடையாளங்களில் ஒன்றான ஓடும் வண்டியில் ஏறுவதில் பயப்படுகிறான். அதன் பின்னர் காராபூரி வந்து சேரும் டோட் ரயில்வே ஸ்டேசனில் அமைந்திருக்கும் கோலா ஐஸ் வாங்கி சாப்பிடும் நேரத்தில் இந்திய கால்சென்டர் மேனேஜர் புரவத் நரசிம்மார் விரவாதாச்சரிய்யா aka ப்ரு அறிமுகம் ஆகிறார். இந்த இடத்தில் ஆரம்பிக்கிறது நமது இந்திய ஆங்கில உச்சரிப்பும் அமெரிக்கர்களின் ஆங்கில உச்சரிப்பின் வித்தியாசம். Todd தன்னை டாட் என அழைக்க சொல்லுவதும் ப்ரு மறுபடியும் டொட் என அழைப்பதும், Cost cutting'க்காக ஹோட்டல் தங்க வைப்பத்திலிருந்து தெரிந்த வீட்டில் Paying Guest'ஆக அழைத்து செல்வதுமாய் கலகலக்க வைக்கிறார்கள். டாட் இடது கையில் சாப்பிடுவதினால் அதை நம்மவர்கள் விளக்க வைப்பதும், திருட்டு சிறுவனின் மொபைல் போன் களவாடப்படும் காட்சிகளும் சற்று வெறுப்பேத்துவதாய் நகர்கிறது(இந்திய பாசம்??)

முதன்முறையாக இந்திய அலுவலகத்துக்கு வரும் டாட் அங்கு நடத்திருக்கும் முழுமையடயாத கட்டிடத்தில் நடக்கும் வேலைகளில் வெறுப்பாகும் அவன் அலுவலுகத்தின் அடுத்த வாசலருகே மாடு நிற்பதும், தன்னுடய அறையில் கண்ணாடி பொருத்தப்படாது கண்டு வெறுப்பாகிறான்.தன்னுடைய முதல் பயற்சியில் அனைத்து இந்திய பணியாளர்களுக்கும் அமெரிக்க ஆங்கிலத்தை பயிற்வித்தலில் அவனுடைய மூக்குறுத்தலில் அறிமுககிறார் முண்டகண்ணி கதாநாயகி ஆயிஸா டாக்கர்(சந்தோஷ் சிவனின் மல்லியில் நடித்தவர் starwar II'லில் ராணியாக வருபவர்).

அமெரிக்கா நேரப்படி தன்னுடய வாழ்க்கையை தொடரும்ம் டாட் இந்திய இரவில் வேலை முடிந்ததும் தன்னுடைய அலுவலகவேலைகளில் ஒன்றாக இந்திய பணியாளர்களுக்கு பயற்றுவித்தலில் மறுபடியும் தோற்கடிக்கப்படுகிறான். மறுநாள் பயற்சியில் உச்சரிப்பு, மொழியாளுமையில் இருக்கும் பிரச்சினையை விளக்கவரும்போது Eraser & condom'க்கும் இருக்கும் வித்தியாசத்தில் மறுபடியும் கலகலக்க வைக்கிறார்கள். வீடியோ'வே பாருங்கள்!!

காமெடி சீன் :-


MPI குறைத்தலில் ஆஷவின் பங்கு அதிகமாகப்பட ப்ருவின் பொறாமை பத்த வைக்கப்படுகிறது. ஹோலி கொண்டாட்டம், இந்திய உணவு பகிர்ந்துண்ணும் கலாச்சாரத்தில் உந்தப்படும் டாட் படிப்படியாக இந்தியனாக தன்னை தயார்படுத்தி கொள்ளும் முயற்சியில் இறங்க ஆரம்பிக்கிறான். இந்திய பணியாளர்களுக்கு இணக்கமான முறையில் நடக்க ஆரம்பிக்க அமெரிக்க முதலாளியிடம் கெட்ட பெயர் சம்பாதிக்கிறான். இந்த சந்தடிசாக்கில் முண்டகண்ணி கதாநாயகியிடம் இவன் தன்னுடய மனதையும்,கதாநாயகி இவனிடம் அவள் எல்லாத்தையும் இழக்கிறார்கள். திரைக்கதையின் ஆரம்பித்தலிருந்து கடவுள் காளியும்,லிங்கமும் பெரும் பங்கு வகிக்கிறார்கள். லிங்கத்தை பற்றி கதாநாயகியின் விவரிப்பில் டாட்'க்கு பற்றிக்கொள்ளும் பதற்றம் நமக்கும் பற்றிக்கொள்கிறது.

இறுதியாக டாட்'னின் முதலாளி இந்தியாவுக்கு வருகை தருவதும், இவன் தன்னை முழுமையாக இந்தியகலாச்சாரத்துக்கு தக்கவாறு மாற்றிக்கொள்வதுமாய் திரைக்கதை முடிவை நோக்கி பயணிக்கிறது. முதலாளி இந்திய வருகையின் நோக்கம் இந்திய அவுட்சோர்ஸை சீனாவுக்கு மாற்றுவதாக வந்திருப்பதை அறிந்து வெறுப்பாகி தன்னுடைய பணியாளார்களுக்கு அறிவிக்க சோகத்துடன் சொல்ல நம்மவர்கள் அதை மகிழுவுடன் எதிர்கொள்கிறார்கள். தன்னுடைய இந்திய வாழ்க்கை முடிவுறும் வெறுப்பில் இந்திய மேனஜர்க்கு சீன வாழ்க்கையை அமைந்து தருவதிலும் அவனுடைய இந்தியகாதலி முண்டக்கண்ணியும் போன் கால் பேசுவதிலும் படம் முடிகிறது.

இன்னமும் விளக்கி சொல்வதில் இந்த படத்தில் காட்சிகள் குறைவாக இருந்தாலும், உள்குத்து அதிகமாக இருப்பதினாலும் ஒன்னும் சொல்வதற்கு இல்லை. Comedy drama என்ற வகைப்படுத்தில் இந்த திரைப்படத்தை ஒரு முறை பார்க்கலாம்.

9 comments:

ILA said...

படம் பார்த்துட்டு வந்துச் சொல்றேன்.

கப்பி பய said...

நோட் பண்ணிக்கிட்டேன் :))

ஆயில்யன். said...

நோட் பண்ணிக்கிட்டேன் :))

படம் பார்த்துட்டு வந்துச் சொல்றேன்.


:))

Sridhar Narayanan said...

//ஹீரோ(டோட் ஆண்டர்சன் toad andersan)//

அட அவர் Todd Anderson-ங்க. இந்தியர்கள் உச்சரிப்பில்தான் அவரை 'தவளை' (Toad) ஆக்கினாங்கன்னா... நீங்க எழுத்திலேயே ஆக்கிடுவீங்க போல. :-))

//ஆயிஸா டாக்கர்//

அது ஆயிஷா டாக்கியா (Ayesha Takia). இவர் ஒரு ஹிந்தி நடிகைதான்.


நீங்கள் சொல்லும் ஆயிஷா தார்கர் (Ayesha Dharker) சந்தோஷ் சிவனின் "The Terrorist' படத்தில் 'மல்லி' என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் ஒரு இந்தியாவில் பிறந்த பிரிட்டிஷ் நடிகை.

'மல்லி' என்பதும் சந்தோஷ் சிவனின் முந்தையப் படம். அதில் சிறுமியாக நடித்தது ஸ்வேதா என்றொரு நடிகை. இரண்டும் சந்தோ சிவனின் படங்கள் என்பதால் குழப்பம் போலும்.

ஒரு தரம் பாக்கலாம்னு சொல்றீங்க. சந்தர்ப்பம் கிடைக்கும்போது பாத்திடுவொம். நன்றி!

Sridhar Narayanan said...

Oopss.... மன்னிச்சுக்குங்க. இந்த படத்தில் நடித்தவர் Ayesha Dharkar-தான். :-)

இராம்/Raam said...

விவ்ஸ், KTM , ஆயில்ஸ்,

பார்த்துட்டு எப்பிடியிருக்குன்னு சொல்லுங்க....

ஸ்ரீதர்,


ஸ்பெல்லிங் மிஸ்டேக் சரி பண்ணியாச்சு... :) ஆயிஷா டாக்கியா'வே தெரியாமே இருக்குமா???? :))))

மங்களூர் சிவா said...

/
இந்த சந்தடிசாக்கில் முண்டகண்ணி கதாநாயகியிடம் இவன் தன்னுடய மனதையும்,கதாநாயகி இவனிடம் அவள் எல்லாத்தையும் இழக்கிறார்கள்
/

நோட் பண்ணிக்கிட்டேன்
படம் பார்த்துட்டு வந்துச் சொல்றேன்.

SanJai said...

//இந்த சந்தடிசாக்கில் முண்டகண்ணி கதாநாயகியிடம் இவன் தன்னுடய மனதையும்,கதாநாயகி இவனிடம் அவள் எல்லாத்தையும் இழக்கிறார்கள//

இதை சொல்லிட்டு யூட்யூப்ல இருந்து சுட்ட காமெடி சீன் போட்ட ராமை கன்னாபின்னாவென்று கண்டிக்க கடமை பட்டிருக்கிறேன்.

ILA said...

Ram, just watched the movie.