Sunday, April 13, 2008

Jalsa Movie Review

மகேஷ் பாபு நடித்த மாபெரும் வெற்றி படமான "அத்தடு"வை (தமிழில் நந்து) இயக்கிய திருவிக்ரம் இயக்கியிருக்கும் படம் "ஜல்சா". தொடர் தோல்விகளால் பின்னுக்கு தள்ளப்பட்டிருந்த "பவர் ஸ்டார்" பவன் கல்யாண் மீண்டும் வெற்றி நாயகனாக அதிகம் எதிர்பார்ப்புக்குள்ளான படம். பவன் கல்யாணை திருவிக்ரம் ஏமாற்றவில்லை. படம் சூப்பர் டூப்பர் ஹிட். முதல் நாளில் 10 கோடி ரூபாய் கலெக்ஷன். ஒரு வாரத்தில் 21 கோடி கலெக்ஷன்.



படம் பார்த்தா அனுபவிக்கனும், ஆராயக்கூடாதுனு முடிவோட போனீங்கனா ரெண்டரை மணி நேரம் போறதே தெரியாது. அவ்வளவு எண்டர்டெயின்மெண்ட். பவன் சும்மா புகுந்து விளையாடிருக்காரு. டயலாக் டெலிவெரி எல்லாம் சூப்பர். அடுத்து படத்துக்கு முக்கியமானவங்க இலியானா. அவருக்கு குடுத்த காசுக்கு ஒரு ரூபாய் கூட மிச்சம் வைக்காம வேலை வாங்கிய டைரக்டரை பாராட்டியே ஆகனும். படத்துக்கு ரெண்டாவது தடவை போறவங்க எல்லாம் இலியானாவாக்காக தான் போறாங்கனு மக்கள் பேசிக்கறாங்க. (நான் முதல் தடவையே அதுக்காகத்தான் போனேனு எல்லாம் இங்க சொல்ல மாட்டேன்). பார்வதி மில்டனும் சூப்பரா இருக்காங்க. அவுங்களையும் சரியா பயன்படத்திருக்கலாம்.


படம் முழுக்க காமெடி. முதல் சீன்ல இருந்து க்ளைமாக்ஸ் வரைக்கும் எல்லா டயலாக்மே காமெடி தான். ஆனா அதுக்காக கொஞ்சம் சீரியசா சொல்ல வேண்டிய நக்சல்பாரிகளின் வாழ்க்கையை ரொம்ப சாதாரணமா சொல்லிட்டார். அதுவுமில்லாம பவன் கல்யாண் வீட்ல, பாட்டுல எல்லா இடத்துலயும் சேகுவாரா படம் வேற. அதை பார்த்து நம்ம ஆளுங்க ஏதாவது பாப் சிங்கர்னு நினைச்சிக்காம இருந்தா சரி தான்.

படத்துல அங்க அங்க மகேஷ் பாபு பேசியிருக்காரு. சூப்பர். அதே மாதிரி விஜய் படத்துல அஜித்தோ இல்லை அஜித் படத்துல விஜயோ பேசற நாள் எப்ப வருமோ?

இந்நேரம் இந்த படத்தை விஜய் புக் பண்ணியிருக்கலாம். அவருக்கு இந்த ரோல் அப்படியே பொருந்தும். Ctrl-C, Ctrl-V பண்ணிடலாம்.

சரி இனிமே கதை... படம் பார்க்கனும்னு ஆசைப்படறவங்க இதுக்கு மேல படிக்காதீங்க.



படத்துல கதை எல்லாம் இருக்குனு நினைச்சிட்டு இதை படிச்சிங்கனா நீங்க ரொம்ப பாவம் ;)... நான் படத்துல ரசிச்ச காட்சிகளை மட்டும் சொல்லிடறேன்.

* கமலினி முக்கர்ஜியை பொண்ணு கேட்டு பவன் பிரகாஷ் ராஜை பார்க்க போற காட்சி அசத்தல். அதுக்கு அப்பறம் அவர் கல்யாணத்துக்கு போய் "சாப்பாடு சூப்பரா இருக்குனு வெளிய பேசிக்கிட்டாங்க. அதான் வந்தோம்னு சொல்லிட்டு, போட்டோக்கு அவர் பக்கத்துல நின்னு போஸ் கொடுக்கறது இன்னும் சூப்பர்.


*இலியானாக்கு அந்த லூஸ் மாதிரி கேரக்டர் சூப்பர். பவனை சுத்தி சுத்தி காதலிக்கறாங்க.

*இலியானா கமலினி தங்கச்சினு தெரிஞ்சதுக்கப்பறம் அவுங்க நினைச்சி பாக்கற அந்த சீக்குவன்ஸ் சூப்பர். இந்த அக்காவோட பழைய புக், அக்காவோட பழைய சைக்கிள்னு சொல்லிட்டு கடைசியா இந்த அக்காவோட பாய் ஃபிரெண்ட்னு சொல்ற சீன்ல தியேட்டரே அதிருது.



*பிரகாஷ் ராஜ் பிளாஷ் பேக் அட்டகாசம். பிரகாஷ் ராஜ் போலிஸ் அதிகாரி. பவன் பிளாஷ் பேக்ல நக்சல்பாரி. போலிஸுக்கும் நக்சர்பாரிக்கும் நடக்கற சண்டைல இவுங்க ரெண்டு பேர் தவிர எல்லாரும் செத்துடறாங்க. முதல்ல பிரகாஷ்ராஜ் கைல மட்டும் துப்பாக்கி இருக்கு, அவர் பவனை மிரட்டறாரு. கொஞ்ச நேரத்துல துப்பாக்கி கை மாறிடுது. அப்பறம் அந்த பக்கம் வர மந்திரியை பவன் காப்பத்தறாரு. (குண்டு வெச்சதே அவுங்க தான்). பிரகாஷ்ராஜ் மந்திரிக்கிட்ட கெட்ட பேர் வாங்கிடறாரு. பவன் திருந்திடறார். அதனால பவனுக்கு சன்மானம். பிரகாஷ்ராஜுக்கு வனவாசம் (காட்டு இலாகா). பவனோட ஹைத்ரபாத் வாழ்க்கையையும் இவரோட காட்டு வாழ்க்கையையும் கம்பேர் பண்ற சீன் அருமை.



*க்ளைமாக்ஸ் சண்டை முடியும் போது கத்தியை தரைல அழுத்திட்டு இதுக்கு என்ன காரணம்? ரோடு போடற காண்ட்ராக்டர் சரியா போடலைனு சொல்றது சூப்பர். அதுக்கு பிறகு பேராலிஸில் அட்டாக்கான வில்லன் தினமும் வந்து அந்த கத்தியை பார்க்கறதும், அதையும் ஒரு நாள் பவன் அழுத்தறதும் சூப்பர். அதுக்கு பிறகு அடுத்து ரோட் போடற காண்ட்ராக்டர் சரியா போடறாருனு மகேஷ் பாபு சொல்ற சீனும் சூப்பர்.

*பிரமானந்த், சுனில் ரெண்டு பேர் சீக்வன்சும் சூப்பர்...

மொத்தத்தில் படம் ஹைதரபாத் பிரியாணி. மசாலா பிடிக்கறவங்களுக்கு தாராளமா பிடிக்கும். Don't Miss it..

Great Come back Pawan...

6 comments:

Boston Bala said...

பரிந்துரைக்கு நன்றி :)

ஹேப்பி டேஸ் பார்த்தாச்சா? எப்படி இருக்கு??

வெட்டிப்பயல் said...

//Boston Bala said...

பரிந்துரைக்கு நன்றி :)

ஹேப்பி டேஸ் பார்த்தாச்சா? எப்படி இருக்கு??//

ஹேப்பி டேஸ் இன்னும் பார்க்கலையா? படம் சூப்பர்... கல்லூரி Vs ஹேப்பி டேஸ் ரிவியூ எழுதறேன்...

பெத்தராயுடு said...

படம் பாத்தாச்சுங்ணோவ். என்ன த்யேட்டர்ல பாத்ததுனால அருகிலிருக்கும் தெலுகு நண்பரின் சப்டைட்டிலுடன் பார்க்க வேண்டியதாப்போச்சு. சுனிலைவிட பிரம்மானந்தத்தின் நகைச்சுவை நன்றாக இருந்தது. படம் முடிந்து வெளியே வரும்போது எனது நண்பர்களிடம் கூறியது, இன்னும் ஆறு மாதத்தில் விஜய் நடிக்க இப்படம் தமிழில் வெளியாகும்'.

அப்புறம், 'கமயம்' படம் நல்லாருக்குன்னாங்களே? பாத்தாச்சா?

வெட்டிப்பயல் said...

//பெத்த ராயுடு said...

படம் பாத்தாச்சுங்ணோவ். என்ன த்யேட்டர்ல பாத்ததுனால அருகிலிருக்கும் தெலுகு நண்பரின் சப்டைட்டிலுடன் பார்க்க வேண்டியதாப்போச்சு.//
நமக்கு ஓரளவுக்கு தெலுகு புரியுங்கறதால பிரச்சனையில்லை...

//
சுனிலைவிட பிரம்மானந்தத்தின் நகைச்சுவை நன்றாக இருந்தது. //
ஆமாம்... பிரம்மானந்த் ட்ராக் சூப்பர்.. தமிழ்ல வடிவேல் பண்ணுவார்னு நினைக்கிறேன் ;)

//
1படம் முடிந்து வெளியே வரும்போது எனது நண்பர்களிடம் கூறியது, இன்னும் ஆறு மாதத்தில் விஜய் நடிக்க இப்படம் தமிழில் வெளியாகும்'.//
கண்டிப்பா...

// அப்புறம், 'கமயம்' படம் நல்லாருக்குன்னாங்களே? பாத்தாச்சா?//
இல்லைங்களே.. பார்த்துட்டா போச்சு

வெட்டிப்பயல் said...

//அரை பிளேடு said...

:)//

:)

;)

பிரேம்ஜி said...

விமர்சனம் நல்லா இருக்கு. பார்த்துடலாம்.